புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். நகரப்பகுதியில் சட்டவிரோதமாக, அனுமதிப்பத்திரமின்றி சாராய விற்பனையில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள்  5 பேர் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஐந்து பேரும் சட்டவிரோதமான முறையில் சாராயங்களைக் கொள்வனவு செய்து அவற்றை நடைபாதை வியாபாரத்தளத்தில் வைத்து விற்பனை செய்துள்ளனர்.

சிவில் உடையில் சென்ற பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களிடமிருந்து 20 போத்தல் சாராயமும் பொலிஸாரினால்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ள யாழ். பொலிஸார், இவர்கள் ஐந்து பேரையும்  நாளை வெள்ளிக்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top