ஜேர்மனியில் லோயர் சேக்சனி மாகாணத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை, தனது நான்கு குழந்தைகளையும் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இக்குழந்தைகள் 5 முதல் 12 வயதுடைய சிறுவர்களாவர். குழந்தைகளை கொன்ற பின்பு, இவர் கடிதம் எழுதி வைத்து விட்டு
தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
அதன் பின் விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த தனது மனைவிக்குத் தான் குழந்தைகளைக் கொன்ற தகவலை மின்னஞ்சல் மூலமாகத் தெரிவித்தார்.
உடனே அந்த மனைவி தனது உறவினர்களுக்குத் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். காவலர் அந்த வீட்டுக்குச் சென்ற போது, அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அருகில் ஒரு கடிதமும் காணப்பட்டது.
தற்போது மிக மோசமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று தெரிய வரும்.
இந்த கொலை சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், தூக்கத்தில் குழந்தைகளை வெட்டிக் கொன்றிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
குழந்தைகளிடமும், தந்தையிடமும் வெட்டுக்காயம் காணப்பட்டாலும் கத்தி எதுவும் அங்கு தென்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக