கனடாவின் ஒட்டாவா மாகாணத்தில் இளம் பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூன்றாவது பெண்ணையும் பொலிசார் கைது செய்தனர்.இந்த பெண்ணை கைது செய்த பொலிசார் இவளுக்கு 17 வயது இருக்கும் என நினைத்தனர், ஆனால் இவளது உண்மையான
வயது 16 தான்.
ஏற்கனவே இந்த வழக்கில் இரண்டு இளம் பெண்களை(15 வயது) கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது ஆட்கடத்தல், அடைத்து வைத்தல், திருட்டு, வன்முறை, மிரட்டல் போன்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இளம் பெண்களாக இருப்பதால் அவர்களின் பெயரை பொலிசார் வெளியிடவில்லை.
இவர்கள் 13-17 வயதுள்ள வேறு மூன்று சிறு பெண்களை, சமூக இணையத்தளம் மூலம் தொடர்பு கொண்டு ஒரு வீட்டிற்கு வரச்செய்து அடைத்து வைத்து அவர்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக