லண்டனில் உள்ள பிரபலமான பள்ளியில் மாணவியர்களின் குட்டை பாவாடை சீரூடைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பிரிட்டனின் நார்த்தாம்டன்ஷயரில் மவுல்டன் அறிவியல் பள்ளி உள்ளது. இங்கு 11 வயது முதல் 18 வயது வரையுள்ள 1,300 மாணவ, மாணவியர்
படிக்கின்றனர்.
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் டிரிவோர் ஜோன்ஸ் கூறியதாவது, எங்கள் பள்ளி மாணவியருக்கு முன்பு பாவாடை சீருடையாக இருந்தது. முழங்கால் வரை இந்த பாவாடை இருக்க வேண்டும்.
ஆனால் மாணவியர் தொடை தெரியும் அளவுக்கு பாவாடைகளை அணிந்து வருவது அதிகப்படியான கவர்ச்சியாக உள்ளது. இதனால் தேவையில்லாத பிரச்னைகள் உருவாகலாம் என்பதால் தற்போது பாவாடையை ரத்து செய்துள்ளோம்.
அதற்கு பதில் பேன்ட் வடிவ சீருடையை அறிமுகப்படுத்தியுள்ளோம். மீண்டும் பாவாடை அணிந்து வரும் மாணவியருக்கு தண்டனையாக பழைய ஆடைகள் அணிவிக்கப்படும் அல்லது அவரின் பெற்றோரை அழைத்து வர வேண்டும்.
புதிய சீருடை அணிந்து வரும் வரை அவர்களை வகுப்பில் அனுமதிக்கப் போவதில்லை. தற்போதைய சீருடை மூலம் மாணவியரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக