புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இத்தாலியில், உள்ள மருத்துவர் ஒருவர் தம்மிடம் வரும், பெண் நோயாளிகள் பலரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவந்துள்ளார். பல நாள் கள்வன் ஒரு நாள் மாட்டுவான் என்று சொல்லுவார்கள் அல்லவா ? இதேபோல இத்தாலியில் உள்ள
தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று, பெண் நோயாளியாக நடிக்க ஒருவரை அனுப்பியுள்ளது. அத்தோடு மட்டும் நின்றுவிடாது அப்பெண்ணிடம் சிறிய ரக கமராவையும் கொடுத்துவிட்டுள்ளார்கள். வழமைபோல நோயாளியை பரிசோதிப்பதாக குறிப்பிட்ட டாக்டர் கூறி அவரை படுக்கவைத்துள்ளார். அப்பெண்ணின் மேலாடைகளை களற்றி பின்னர், மார்பகங்களில் முத்தமிட முனைந்துள்ளார். இதனை அடுத்து அப்பெண் அவரிடம் இருந்து தப்ப முயற்சித்துள்ளார்.



அவர் கொண்டுசென்ற சிறியரகக் கமராவை, அவர் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவந்தவேளை தான் அப்பெண் ஒரு நோயாளி அல்ல ஒரு நிருபர் என்பது டாக்டருக்குத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறிப்பிட்ட டாக்டர் கடுங்கோபம் கொண்டு, அப்பெண்ணையும், தொலைக்காட்சிக்கு புகைப்படம் எடுக்கும் நபர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதனையும் அந் நிருபர்கள் படம் எடுக்கத் தவறவில்லை. இச் செய்தி வெளியானதால் இத்தாலியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட மருத்துவரை வேலையில் இருந்து நீக்கவேண்டும் என பெண்கள் அமைப்பினர் போர்கொடி தூக்கியுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top