கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையில் முன்னணி நாளிதழ் ஒன்றின் முகப்பில் அரைப்பக்கத்தில் கிண்ணஸ் உலக சாதனை தொடர்பான செய்தியொன்று வெளியாகியிருந்தது.மூக்கை வாய்க்குள் திணித்து தனது முகத்தை அவலட்சணமாக்கியது மட்டுமன்றி,
தனது சாதனையை எவராவது முறியடித்தால் பணப்பரிசும் வழங்குவதாக ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
அது தொடர்பான சில புகைப்படங்களையும் அந்த நாளிதழ் வெளியிட்டிருந்தது.
வேறு எந்த ஊடகங்களுமே கண்டு கொள்ளாத இதை உலக சாதனையாக உள்ளுர் தமிழ் ஊடகம் முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.
அன்றைய தினம் இதைப் பார்த்த பாடசாலை மாணவர்கள் பலரும் இந்த மூடத்தனமான விபரீத முயற்சியில் இறங்கியதன் விளைவாகப் பல தமிழ்ப் பாடசாலைகளின் வகுப்பறைகளில் கலகம் ஏற்பட்டமையைக் காணக்கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சில தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரியர்களால் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாதிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இரு மாணவர்கள் வாயை கைகளால் பிளக்க குறிப்பிட்ட மாணவன் தனது மூக்கை தனது வாய்க்குள் திணிக்க முயற்சித்தமையால் மூச்சுத்திணறல் நிலைமையும் ஏற்பட்டது.
குறிப்பிட்ட பத்திரிகையில் வெளியாகிய முன்பக்க செய்தி இலங்கைத் தொலைக்காட்சி ஒன்றிலும் விலாவரியாக வாசிக்கப்பட்டதால் விபரீதம் பன்மடங்காகியதாக
தெரிவிக்கப்படுகிறது.
நல்ல விடயங்கள் பல இருக்கும் நிலையில் ஏன் இப்படி பிரசுரம் செய்தீர்கள் என்று பெற்றோர் பலரும் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் அந்த நாளிதழுக்கு பொறுப்பானவர் வேண்டாமென அறிவுறுத்தியும் கீழிருந்தவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக