சமீபகாலமாக உலகம் முழுவதிலும் நாய், பூனை போன்ற செல்ல பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி இருக்கிறது. இவர்களில் பெரும் பாலானோர் செல்லப் பிராணிகளை தங்களது குழந்தை போல வளர்த்து வருகிறார்கள். இதேபோல டச்சு நாட்டு ஓவியர்
ஜான்சன்...
ஜான்சன் என்பவர் பூனை ஒன்றை வீட்டில் செல்லமாக வளர்த்து வந்தார். அதற்கு 'ஆர்வில்லே' என்று பெயரிட்டு செல்லமாக அழைத்தார். எங்கு சென்றாலும் அந்த பூனையை அழைத்துச் செல்வார். ஓவியம் வரையும் போது கூட பூனையை தன்னுடனே வைத்திருப்பார்.
இரவில் தூங்கும்போதுகூட தனது மெத்தையில் படுக்க வைப்பார். இப்படி அவர் செல்லமாக வளர்த்த பூனை சில வாரங்களுக்கு முன்பு வீட்டு முன்புறம் உள்ள சாலையில் ஓடியது. அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துபோனது.
இதை அறிந்ததும் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார். செல்ல பூனையின் மறைவை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதையடுத்து தனது பூனையின் உடலை வைத்து சிறிய ரக ஹெலிகாப்டரை உருவாக்கத் திட்டமிட்டார்.
இதன்படி பூனையின் உடலில் உள்ள குடல் மற்றும் உறுப்புகளை அகற்றினார். பின்னர் அதன் தோலின் உள்பகுதியில் சிறிய என்ஜின்கள் பொருத்தினார். 4 கால்களை அகலமாக விரித்து வைத்தபடி 4 விசிறிகளை பொருத்தினார். இந்த பூனை ஹெலிகாப்டரை நண்பர்கள் உதவியுடன் வெற்றிகரமாக உருவாக்கினார்.
அந்த பூனை ஹெலிகாப்டரை அவர் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்ராம் நகரில் நடந்த கண்காட்சிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் தனது செல்ல பூனையின் உடலில் இருந்து வடிவமைத்த ஹெலிகாப்டரை பறக்க விட்டார். இதை அங்கு வந்திருந்த பொதுமக்கள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
ஓவியர் ஜான்சன் கூறும் போது, 'எனது செல்லப் பூனையின் உடல் ஹெலிகாப்டர் போல் பறக்கும்போது என் மனதும் ரெக்கைகட்டி பறக்கிறது. அது உயிருடன் இந்த உலகில் பறப்பதுபோல் உணருகிறேன்' என்றார்.
0 கருத்து:
கருத்துரையிடுக