பெட்ரோல் இன்றி சூரிய ஒளியில் இயங்கும் அதிநவீன விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘ஏர்பஸ் ஏ340’ என்ற இந்த விமானம் மிகவும் எடை குறைந்தது. அந்த விமானத்தில் சுவிட்சர்லாந்து நாட்டின் சாகச வீரர் Bernard Piccard (54) நேற்று
பறந்தார்.
இவர் ஒரு மனநல மருத்துவர் ஆவார். மேலும் பலூன்களில் பயணம் செய்து சாகசம் படைத்து வருகிறார். நேற்று காலை 5.22 மணிக்கு ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள பராஜாஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார்.
அங்கிருந்து தெற்கு கடலோரம் வழியாக மொரோக்கோ விமான நிலையத்தை சென்றடைந்தார். 3,600 மீட்டர் உயரத்தில் 40 கி.மீட்டர் தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.
தற்போது இதைதான் சோதனை ஓட்டமாக கருதுவதாக பிக்கார்டு தெரிவித்தார். 2014-ம் ஆண்டில் இதன் மூலம் உலகம் முழுவதும் 2,500 கி.மீட்டர் தூரம் பறக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.
0 கருத்து:
கருத்துரையிடுக