புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, முள்ளாமுனை பகுதியில் இளம் ஜோடிகளின் சடலங்களை பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.


ஆயித்தியமலைக்கும் வவுணதீவுக்கும் இடைப்பட்ட பகுதியான முள்ளாமுனை காட்டுப்பகுதியிலேயே குறித்த இளம் ஜோடிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்களில் ஒன்று வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட திக்கோடையை சேர்ந்த அழகதுரை மேகலா (22வயது) எனவும் மற்றவர் களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்குட்பட்ட களுதாவளை 38ஆம் கொலணியை சேர்ந்த அரசரெட்னம் இளங்கோ (34வயது) என அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களின் அருகில் இருந்து நஞ்சுக்குப்பிகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், கறுப்பு டிஸ்கவர் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் இருவரும் காதலர்களாக இருக்கலாம் எனவும் காதல் தோல்வியால் நஞ்சருந்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இரண்டு சடங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top