கர்நாடக மாநிலம், மைசூர் மாவட்டம், ஹன்சூர் தாலுகாவைச் சேர்ந்த உடூர் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35), இவருக்கு 4 மகள்கள்.கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டதால், ராஜேஸ்வரி விவசாய கூலி வேலைக்கு சென்றார். கூலி வேலையில் கிடைக்கும் பணத்தை வைத்து குடும்பம் நடத்த ராஜேஸ்வரி
கஷ்டப்பட்டார். இதனால் கந்து வட்டிக்காரர்கள் சிலரிடம் அவர் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பிச் செலுத்தும் நிலையில் தான் இல்லாததால், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள ராஜேஸ்வரி முடிவு செய்தார். முதலில் மகள்கள் 4 பேருக்கும் விஷம் கலந்த உணவை கொடுத்தார். பின்னர் தானும் விஷம் குடித்தார்.
சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். மறுநாள் விடிந்து வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாததால், அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வீட்டை உடைத்து பிணங்களை கைப்பற்றினர். தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக