புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பொதுவாக புற்றுநோயாளிகளுக்கு டாக்டர்கள் ஆபரேசன் செய்து குணப்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு பெண்ணின் வயிற்றுக்குள் கருவில் வளரும் குழந்தைக்கு புற்றுநோய் ஆபரேசன் நடத்தி சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்து தலைநகர்
லண்டனை சேர்ந்தவர் டாம்மி கான்சலேஷ்.

கர்ப்பிணி ஆன இவர் தனது வயிற்றில் வளரும் கரு வளர்ச்சியை அறிய ஸ்கேன் செய்தார். 17 வாரங்கள் வளர்ச்சி அடைந்த அந்த கரு பெண் குழந்தை என தெரிய வந்தது. எனவே அக்குழந்தைக்கு லெய்னா என டாம்மி பெயரிட்டார்.

ஆனால் அந்த குழந்தையின் வாயில் புற்றுநோய் தாக்கி இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடனடியாக கருவில் வளரும் குழந்தையின் வாயில் சாமர்த்தியமாக ஆபரேசன் செய்து புற்றுநோய் கட்டிகளை அகற்றினர்.

உலகிலேயே முதன்முறையாக கரு குழந்தைக்கு ஆபரேசன் செய்து லண்டன் டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்று அரிய புற்றுநோய் உருவாகும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னும் 5 மாதங்களில் அக்குழந்தை பிறக்கும்.

ஆனால் இது நீண்டநாள் உயிர் வாழ்வது கடினம். என்றும் அவர்கள் கூறினர். இதற்கிடையே தனது வயிற்றுக்குள் வளரும் குழந்தைக்கு ஆபரேசன் நடந்தபோது அதன் வாயில் இருந்து நீர்க்குமிழிகள் வெளியானதை பார்த்ததாக தாய் டாம்மி தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top