இரண்டு வயது சிறுவன் ஒருவன் அயலவராக தமிழர் ஒருவரின் வீட்டின் பின்வளவிலுள்ள நீர் தடாகத்தில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று காலை 10:20 மணியளவில் கனடா, ஸ்கார்பறோவில் பின்ச் கிழக்கு – டப்சகோர்ட் சந்திப்புக்கருகில் உள்ள கரிங்க்
பிளேசில் நிகழ்ந்துள்ளது.
வீட்டின் உரிமையாளரான 58 வயதான சிறிரங்கநாதன் அம்பலம் என்பவரை தடாகத்தை பாதுகாப்பற்ற வகையில் அலட்சியமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிறுவனை முதலில் ஸ்கார்பறோ சென்ரனரி மருத்துவமனைக்கும் பின் அங்கிருந்து ரொறன்ரோ “சிக் சில்ரன்” சிறுவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறிது நேரத்தின் பின் சாவடைந்துள்ளான்.
இச்சம்பவம் பற்றி காவல்துறையினர் தெரிவிக்கையில்,
சிறுவனின் தாயார் மற்றும் பாட்டியாரின் அழுகுரல் கேட்டு வீதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஒடிச் சென்று சிறுவனை தாடாகத்திலிருந்து வெளியே கொண்டுவந்து அவனின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிச் செய்தனர் என்றார்..
முதலில் குழந்தையின் தாயாருக்கு கை விலங்கிட்ட காவல்துறையினர் பின்னர் அவரை விடுத்து வீட்டின் உரிமையாளரை தடாகத்தை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்தார் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்தனர்.
வீட்டின் பின்வளவிலுள்ள இத்தடாகத்தில் உள்ள நீரை வீட்டு உரிமையாளர் தனது பூந்தோடட்த்தைப் பராமரிப்பதற்குப் பயன்படுத்தி வந்தார்.
சிறுவன் பகல்வேளைகளில் அவனது பாட்டியரின் பாராமரிப்பில் இருந்து வருபவன் என்றும் அவரது கவனயீனமே இந்த சம்பவத்துக்குக் காரணம் என அயலவர்கள் சிலர் தெரிவித்திருந்தனர்.
எனினும், இந்த தாடகம் நகரசபையிலிருந்து முறையான அனுமதி பெறப்படாமல் கட்டப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பற்றதாகவும் இருந்தது என்று தடாக வீட்டு உரிமையாளரை காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
சிறிரங்கநாதன் அம்பலம் நீர்த் தாடகத்துடனே இந்த வீட்டை வாங்கினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக