ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூர் நகரில் பெற்ற மகளின் தவறான நடத்தையினால், கோபமடைந்த தந்தை தனது மகளின் தலையைத் துண்டித்துக் கொலைசெய்துவிட்டு, குடும்ப மானம் கருதியே கவுரக்கொலை செய்ததாக போலீசில் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூரில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜஸ்மானந்த் மாவட்டம்,சார்பகுஜா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓம்கார்சிங், இவரது மகள் மஞ்சு. இந்நிலையில் இன்று மதியம் சார்பகுஜா போலீசார் ஓம்கார் சிங்கை கைது செய்து அவரிடம் இளம் பெண் ஒருவரின் ரத்தக்கரை படிந்த தலையை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
ஓம்கார்சிங் போலீசில் தெரிவித்த வாக்குமூலத்தில், தனது மகள் மஞ்சு, பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாள். இது தொடர்பாக அவரை நான் பலமுறை கண்டித்தேன். எனது பேச்சை கேட்காமல் தொடர்ந்து இது போன்று செயல்களில் ஈடுபட்டார். எனவே குடும்ப மானத்தை காக்க வேறு வழியின்றி அவளை கவுரவக்கொலை செய்ய நினைத்தேன். அதன்படி வீட்டிலிருந்து கூர்மையான வாளினை எடுத்து அவளின் தலையை துண்டித்து கொலை செய்தேன். இவ்வாறு அந்த வாக்குமூலத்தில் தெரிவித்தார். சம்பவம் அறிந்த போலீசார் ஓம்கார்சிங்கை கைது செய்து விசாரித்து வருகி்ன்றனர். குடும்ப கவுவரத்திற்காக , பெற்ற மகளை தலையைதுண்டித்த கொடூர தந்தையின் செயல் குறித்து அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக