புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சென்னையை அடுத்த கண்டோன்மென்ட் பல்லாவரம் சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன். பல்லாவரம் இந்திரா காந்தி சாலையில் துணிக்கடை வைத்துள்ளார். இவருக்கும், பெருங்களத்தூரை சேர்ந்த காண்டிராக்டர் சந்திரசேகர் என்பவர் மகள் கீதாஸ்ரீ (வயது27) என்பவருக்கும் திருமணமாகி இரண்டரை
ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கீதாஸ்ரீ பி.இ. பட்டதாரி ஆவார். திருமணத்திற்கு முன்பு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். திருமணமான பின்பும் குழந்தை பெறும் வரை வேலைக்கு சென்றார்.

குழந்தை பிறந்த பின்பு வேலைக்கு செல்ல கணவர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கீதாஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக கீதாஸ்ரீயின் தந்தை சந்திரசேகர் பல்லாவரம் போலீசில் புகார் செய்தார். வரதட்சணை கொடுமையால் மகள் இறந்ததாக புகாரில் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பல்லாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பத்மநாபனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வரதட்சணை கொடுமை காரணமா என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top