ஒரு சிறுவனைக் கடத்திச் சென்று, அடித்து துன்புறுத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.சவுதி அரேபியாவில் கற்பழிப்பு, மதமாற்றம், திருடுதல், போதைப்பொருள் கடத்துதல், கொலை போன்ற குற்றங்களுக்கு தலை
துண்டித்து மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம்.
இதன்படி முகம்மது பின் அஹமது அல் ஜுபேரி என்ற நபருக்கு சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் போதை, மது போன்ற குற்றச்சாட்டுகளும் இவர் மீது சுமத்தப்பட்டது. பாதிப்புக்கு உள்ளான சிறுவனைப் பற்றிய தகவல்களை அரசு வெளியிடவில்லை.
இந்த ஆண்டு மட்டும் சுமார் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக