புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அமெரிக்காவில் காரில் சென்று கொண்டிருந்த போது கணவன், தனது மனைவியை கீழே தள்ளி விட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இருந்து கணவன், மனைவி இருவரும் கடந்த 24ஆம் திகதி காரில் சென்று கொண்டிருந்தனர்.


70 மைல் தூரம் சென்றதும் திடீரென காரில் இருந்து மனைவியை கணவன் தள்ளி விட்டு விட்டார்.

இதனால் படுகாயம் அடைந்து சாலையில் விழுந்து கிடந்த இளம்பெண்ணை, தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீட்டனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடல்நிலை பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையில் ஸ்னோகுவால்மி என்ற இடத்தில் அந்த ஆசாமியை சியாட்டில் பொலிசார் மடக்கி பிடித்தனர்.

இதுகுறித்து சியாட்டில் பொலிசார் கூறுகையில், ரோந்து ஜீப்பில் பின்னால் உட்கார வைத்து விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்றோம்.

அப்போது திடீரென ஆசாமி கீழே குதித்து பொலிசாரை தாக்கினார். கடைசியில் அந்த ஆசாமியை மடக்கி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றோம். அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top