உ.பி. மாநிலத்தில் தனது காதலிக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த மாப்பிள்ளை மீது ஆசிட் ஊற்றி படுகாயப்படுத்தி விட்டார் காதலர்.உ.பி. மாநிலத்தின் ரதன்பூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்தவர் ராஜாராம். அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து
வந்தார்.
ஆனால் காதலியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு செய்து விட்டனர். இதனால் கோபமடைந்த ராஜாராம், தனது காதலிக்குப் பேசியிருந்த மாப்பிள்ளையைப் போய்ப் பார்த்தார். இங்கே பாரப்பா, நான் காதலிக்கும் பெண்ணைத்தான் உனக்குப் பேசியுள்ளனர், பேசாமல் விலகிச் செல் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதை அந்த மாப்பிள்ளை கேட்கவில்லை. இதனால் வெகுண்ட அந்த மாப்பிள்ளை மீது மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து ஊற்றினார். இதில் புது மாப்பிள்ளையம், அவருக்கு அருகில் நின்றிருந்த இரண்டு சிறார்களும் படுகாயமடைந்தனர்.
இதில் புது மாப்பிள்ளைக்கு வலது கண் கடுமையாக பாதிக்கப்பட்டு பார்வை பறி போய் விட்டது.
இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ராஜாராமை வளைத்துப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக