புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணமான தனது மகளை வீட்டில் நிர்வாணப்படுத்தி பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக தந்தையொருவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.கொழும்பு கொம்பனித் தெருவைச் சேர்ந்த இந்நபருக்கு எதிராக பொலிஸார் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்தனர். தான்
திருமணமான பெண் எனவும் தனது தந்தை மதுவுக்கு அடிமையானவர் எனவும் மேற்படி பெண் கொம்பனித் தெரு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தமது வீட்டில் வைத்து தனது தந்தை தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார்.

இச்சந்தேக நபர் தண்டனைச் சட்டக்கோவையின் 345 ஆவது பிரிவின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றம் புரிந்துள்ளதாக நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். அவருக்கு எதிரான தீர்ப்பை ஜூலை 16 ஆம் திகதி அறிவிப்பதாக நீதவான் கனிஷ்க விஜேரட்ன தெரிவித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top