புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில், வீதி ஒன்றில் தனது சொந்தக் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கூடையில் கட்டி தந்தை ஒருவர் இழுத்துச் செல்லும் காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவின் வீதிகள் அதிக
நெரிசல்கொண்டவையாக காணப்படுகிறது. இப்படி பல ஆபத்துக்கள் நிறைந்த அந்த வீதியில் தனது 2 வயதுப் பிள்ளையைக் கட்டி இழுத்துச் செல்கிறார் ஒரு தந்தை. இவர் ஒரு பிளாஸ்டிக் கூடையில் தனது பிள்ளையை இருத்திவிட்டு, பழைய கயிறு ஒன்றால் கட்டி, அதனை தனது மோட்டார் சைக்கிளில் கட்டி, இழுத்துச் சென்றுள்ளார்.

பிற நாடுகளில், காரில் செல்லும் சிறுவர்கள் கூட அவர்களுக்கு என்று தயாரிக்கப்பட்ட பிரத்தியேக ஆசனத்தில் அமர்த்தப்பட்டு, ஆசனப் பட்டிகளை அணிகின்றனர். ஆனால் சீனாவில் நிலைமை மாறிவிட்டதோ என்னமோ ! ஏன் இவ்வாறு ஒரு சிறு குழந்தையின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளவேண்டும் ? அப்படி என்ன பிரச்சனை இவருக்கு இருக்கிறது ?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top