புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிரிட்டனில், 12 வயது சிறுவன் ஒருவன், இரு சிறுமியரை மிரட்டி கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் உள்ள கிரேட்டர் மான்செஸ்டர் பகுதியில் பால்டன் என்ற பகுதியில் உள்ள
மைதானத்தில் சில தினங்களுக்கு முன்பு சிறுவர், சிறுமிகள் ஒளிந்து விளையாடினார்கள்.

அந்த விளையாட்டின்போது 12 வயது சிறுவன் ஒருவன் 10 வயது சிறுமியை மறைவிடத்தில் வைத்து கற்பழித்தான். அந்த சிறுமியை அவன் அன்று பல தடவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளான்.

அதுபோல், மறுநாள் அதே மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியையும் அவன் மிரட்டி ஒரு வீட்டிற்கு பின்னால் அழைத்துச் சென்று கற்பழித்தான்.

இதுபற்றி அந்த 2 சிறுமிகளின் பெற்றோர் பொலிசில் புகார் செய்தனர். சிறுவனை கைது செய்த பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

தன் மீதான குற்றச்சாட்டுக்களை அந்த சிறுவன் மறுத்த போதும் கற்பழிப்பில் ஈடுபட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.

இதைத் தொடர்ந்து அந்த சிறுவனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பிரிட்டனில் மிக குறைந்த வயதில் கடும் காவல் தண்டனையை இந்த சிறுவன் பெற்றுள்ளான் என்று தெரியவந்துள்ளது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top