புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


குஜராத்தில் வாலிபர் ஒருவர் கல்லூரி மாணவியை கற்பழி்த்து அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத் மாநிலம் தகோத் பகுதியைச் சேர்ந்தவர் லதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). கல்லூரி மாணவி. அவரது
பக்கத்து வீட்டில் இருக்கும் இளைஞர் ஒருவர் லதாவை காதலிப்பதாக அவரிடம் தெரிவித்து வந்துள்ளார். அவரது காதலை லதா ஏற்கவில்லை.

இந்நிலையில் லதா வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த அந்த வாலிபர் அவருக்கு மயக்க மருந்து கலந்த ஜூஸ் கொடுத்துள்ளார்.
அதை குடித்த லதா மயங்கினார். இதையடுத்து அந்த வாலிபர் லதாவை கற்பழித்து அதை வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதோடு சி.டி.க்கள் போட்டு பலருக்கும் கொடுத்துள்ளார்.

இது குறித்து அறிய வந்த லதா பேரதிர்ச்சி அடைந்தார். அவரது பெற்றோர் இந்த விவகாரம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
பெண்களுக்கு வீட்டிலும், ரோட்டிலும் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது என்பதையே இந்த சம்பவம் உணர்த்துகிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top