புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பெங்களூரில் பேஸ்புக் இணைய தளத்தில் காதலியை விபசார அழகியாக விளம்பரப்படுத்திய தனியார் நிறுவன என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர். ஒரு தலை காதலால் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

பெங்களூர் டொம்லூர் நாராயணபுரா பகுதியில் வசித்து வருபவர் கேசவமூர்த்தி. இவரது சொந்த ஊர் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா புட்டேனஹள்ளி ஆகும். கோரமங்களாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் என்ஜினீயராக கேசவமூர்த்தி பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், புட்டேனஹள்ளியை சேர்ந்த இளம்பெண் ராதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) மீது கேசவமூர்த்திக்கு காதல் மலர்ந்தது.

இதுபற்றி ராதாவிடம், கேசவமூர்த்தி தெரிவித்தார். ஆனால் அவர் மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதன்பிறகு ராதாவின் பெற்றோரிடம் சென்று தனக்கு ராதாவை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். இதற்கு அவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதனால் ராதா மீதும் அவர்களது பெற்றோர் மீதும் கேசகமூர்த்தி மிகுந்த கோபத்தில் இருந்தார்.

இதற்கிடையே, கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டிப்ளமோ முடித்து விட்டு பெங்களூர் வந்த ராதா இங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்

கே.ஆர்.புரம் பகுதியில் முதலில் தங்கி இருந்த ராதா, தற்போது ஜே.பி.நகரில் வசித்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட கேசவமூர்த்தி, ராதாவை பழிவாங்கும் எண்ணத்துடன், அவரது செல்போனிற்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்.க்களை அனுப்பு உள்ளார்.

இதுபற்றி ஜே.பி.நகர் போலீசில் ஏற்கனவே கேசவமூர்த்தி மீது ராதா புகார் செய்திருந்தார். அப்போது கேசவமூர்த்தியை அழைத்த போலீசார், ராதாவிற்கு இதுபோன்ற தொந்தரவுகளை கொடுக்க கூடாது, மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், கே.ஆர்.புரம் போலீசில் கேசவமூர்த்தி மீது ராதா மற்றொரு புகார் கொடுத்து உள்ளார். அதில், எனது பெயரில் பேஸ்புக் இணைய தளத்தில் கேசவமூர்த்தி புதிதாக கணக்கு தொடங்கி, என்னுடைய புகைப்படத்தையும், அவரது புகைப்படத்தையும் இணைத்து வைத்துள்ளார். மேலும் பெங்களூர் நகரில் நான் (ராதா) பெரிய விபசாரி என்றும், ஒருநாள் என்னுடன் இருக்க ரூ.3 ஆயிரம் கொடுத்தால் போதும் என்றும் எழுதி வைத்துள்ளார்.

நான் 23 முறை கருக்கலைப்பு செய்திருப்பதாகவும் பேஸ்புக் இணைய தளத்தில் என்னை பற்றி தவறாக கேசவமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். இதுதவிர என்னுடைய செல்போனுக்கும், பெற்றோர், உறவினர் செல்போனுக்கும் ஆபாச மற்றும் தகாத வார்த்தைகளில் திட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பி வைத்து உள்ளார். எனவே கேசவமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த புகாரில் ராதா கூறி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ராதா கொடுத்த புகாரின் பேரில் கே.ஆர்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர். மேலும் இளம்பெண்ணுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பி தொந்தரவு செய்தது,

இணையத்தில் அவரது பெயரை கலங்கப்படுத்தியதாக கூறி என்ஜினீயர் கேசவமூர்த்தியை நேற்று காலையில் போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்திய பிறகு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top