புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதியில் உள்ள குண்டூர்நாடு முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மனைவியை அடித்துக்கொலை செய்த 2 வாலிபர்களை, வாழவந்திநாடு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.சேந்தமங்கலம் அடுத்த நத்தக்குழிப்பட்டியை சேர்ந்தவர் குண்டூர்நாடு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் பால்ராஜ் (50).
அவரது முதல் மனைவி ராஜாமணி (42). கணவன், மனைவிக்கும் இடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, பத்து ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.
ராஜாமணி அதே பகுதியில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 23ம் தேதி, அரியூர் சோளக்காடு காக்காபூஜா ஆண்டவர் ஆசிரமம் அருகே ராஜாமணி மர்மான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த கொலை குறித்து வாழவந்திநாடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். ராஜாமணி வீட்டுக்கு, அடிக்கடி வாலிபர் ஒருவர் வந்து சென்றது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில், அவர் திருச்சி மாவட்டம், ஆர்.கோம்பையை சேர்ந்த அசோக் (22) என்பதும், கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும், ராஜாமணிக்கும், அசோக்குக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜாமணி தொடர்ந்து அசோக்கை வற்புறுத்தி வந்துள்ளார். விருப்பம் இல்லாத அசோக், திருமணத்தை தட்டிக்கழித்து வந்தார்
ஒரு கட்டத்தில், கள்ளகாதலியான ராஜாமணியின் தொந்தரவு அதிகரித்துள்ளது. அதனால், ராஜாமணியை தீர்த்துக்கட்ட அசோக் முடிவு செய்துள்ளார்.

அதற்கு, தனது நண்பர் குண்டூர்நாட்டை சேர்ந்த மதியழகன் (33), என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார். கடந்த 22ம் தேதி மாலை, குண்டூர் நாட்டிலிருந்து பஸ்சில் வந்த ராஜாமணியை, தனது மோட்டார் சைக்கிளில் அரியூர் சோளக்காடு காக்காபூஜா ஆஸ்ரமம் அருகே அசோக் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மதியழகன் பதுங்கி இருந்துள்ளார்.அப்போது, இருவரும் சேர்ந்து, கட்டை மற்றும் கல்லால் ராஜாமணியை அடித்து கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர் என்பது, போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வாலிபர்கள் இருவரையும், போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top