புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த புதுக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பசுபதி மகன் அர்ஜுனன் (48). இவரது மனைவி தமிழ்செல்வி (43). தமிழ்செல்வியுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் கருப்பையா மகன் ராமநாதன் (35), கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இவரை கணவர் அர்ஜுனன்
மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

இதன் பின்னரும் தமிழ்செல்வியுடனான கள்ளத் தொடர்பை ராமநாதன் கைவிடவில்லை. மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ள ராமநாதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஊர் பஞ்சாயத்தாரிடம் அர்ஜுனன் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து நடந்த பஞ்சாயத்து கூட்டத்தில் ராமநாதன் கண்டிக்கப்பட்டார். ஊரார் முன்னிலையில் பஞ்சாயத்தார் கண்டித்ததால் அவமானமடைந்த ராமநாதன், இதற்கு காரணமான அர்ஜுனன், இவரது மனைவி தமிழ்செல்வி ஆகியோரை கொலை செய்யப் போவதாக எச்சரித்துள்ளார்.

கடந்த 26.07.2012 அன்று மீமிசல் அருகில் உள்ள முத்துக்குடா கடலோரக் கிராமத்தில் இருந்து மாலை, 6 மணிக்கு அர்ஜுனன், தமிழ்செல்வி ஆகியோர் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

முத்துக்குடா அருகே கிழக்கு கடற்கரை சாலையில், ரோட்டோரமாக நடந்து சென்ற போது, பின்னால் டாடா சுமோ ஜீப்பை வேகமாக ஓட்டி வந்த ராமநாதன், திடீரென்று அவர்கள் மீது ஜீப்பை மோத விட்டார்.

இதில், தமிழ்செல்வி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். பலத்த காயமடைந்த கணவர் அர்ஜுனன், மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் காலை இறந்தார். இந்த துணிகர சம்பவம் முத்துக்காடு மற்றும் புதுக்காடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து கருப்பையா கொடுத்த புகார் மீது, வழக்குப் பதிவு செய்துள்ள மீமிசல் போலீசார், கள்ளத் தொடர்பை கண்டித்த தம்பதியினர் மீது, காரை ஏற்றி கொலை செய்த வாலிபர் ராமநாதனை, கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top