புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


துல்கிரிய பிரதேசத்தில் உள்ள பொதுக் கிணறு ஒன்றில் அரைகுறை ஆடைகளுடன் குளிக்கும் காட்சியை வீடியோ பிடித்த 4வர் பொலிசாரிடம் வசமாக பிடிபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாகவே இவர்கள் இச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனை அவதானித்த பெண் ஒருவரின் சகோதரர், பொலிசாருக்கு முறைப்பாடுசெய்துள்ளார்.


இருப்பினும் பொலிசார் அங்கே வருவதற்கு முன்னதாகவே இக் கும்பல் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிட்டது. நேற்றைய தினம் மீண்டு வந்து இக் கும்பல் மறைந்திருந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து குறிப்பிட்ட நபர் மீண்டும் பொலிசாருடன் தொடர்புகொள்ள, இம்முறை விரைந்துவந்த பொலிசார் 4ல்வரையும் கோழி அமுக்குவதுபோல அமுக்கிப் பிடித்தனர். பொலிசார் கொடுத்த வைத்தியத்தில் அவர்கள் உண்மையை உளறியுள்ளனர். அரையும் குறையுமாக குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்து அதனை சி.டியில் பதிவுசெய்து விற்க இவர்கள் பிளான்போட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை அனைவரும் துல்கிரிய நீதவான் லக்மால் விக்கிரமசூரிய முன்னிலையில் நிறுத்தப்பட்டதன் பின்னர் 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரதேசத்தில் அமைந்துள்ள பொதுக் கிணற்றுகளில் குளிக்கும் பெண்கள் கவனமாகக் குளிக்குமாறும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனராம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top