வேதாரண்யம் அருகே ஒரே பெண்ணிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை கண்டித்து ஊர்பஞ்சாயத்தில் அபராதம் விதித்ததால் மனமுடைந்த அண்ணன், தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.நாகை மாவட்டம் வேதாரண் யம் தாலுகா வானவன்மகா தேவியை
சேர்ந்தவர் காளியப்பன் (40). இவரது மனைவி ராணி. அதே ஊரை சேர்ந்தவர் கந்தசாமி (19). இவரது தம்பி கலியமூர்த்தி (18). மீனவர்கள். ராணிக்கும் கந்தசாமிக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத் தொடர்பு இருந்து வந்தது. அதன்பின் கலியமூர்த்தியும் ராணியுடன் தொடர்பு வைத்திருந்தார்.
கள்ளத்தொடர்பை கை விடும்படி மனைவி ராணியை காளியப்பன் பலமுறை கண்டித்தும் ராணி கேட்கவில்லை.
இதுபற்றி ஊர் பஞ்சாயத்தில் காளியப்பன் புகார் கூறினார். ஒரு மாதத்துக்கு முன் நடந்த பஞ்சாயத்தில், ராணிக்கும், அவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கந்தசாமி, கலியமூர்த்திக்கும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் ராணி ரூ.20 ஆயிரமும், கந்தசாமியும், கலிய மூர்த்தியும் தலா ரூ.10 ஆயிரமும் கட்டினர். மேலும் இனிமேல் ராணியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என இருவரையும் பஞ்சாயத்தார் எச்சரித்தனர்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி மாலை ராணி தனது கள்ளக்காதலர்கள் கந்தசாமி, கலியமூர்த்தி ஆகியோர் மீண்டும் கடற்கரை பகுதியில் சந்தித்து பேசியுள்ளார். இதையறிந்த பஞ்சாயத்தார், ஊர் பஞ்சாயத்தில் எச்சரித்த பிறகும் நீங்கள் எப்படி பேசலாம் என அவர்களை கண்டித்தனர்.
இதனால் மனமுடைந்த கந்தசாமியும், கலியமூர்த்தியும் அன்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற் கொலை செய்துகொண்டனர். ஊர் பஞ்சாயத்தார் மற்றும் உறவினர்கள் இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் பிணங்களை எரித்துவிட்டனர். வேட்டைக் காரனிருப்பு போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக