வேதாரண்யம் அருகே உள்ள சேனாதிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் கரிஷ்மா (வயது 19) பி.ஏ. பட்டதாரி. இவருக்கும் ஆதனூரைச் சேர்ந்த பெயிண்டர் சுதாகருக்கும் காதல் ஏற்பட்டது.கடந்த ஒரு வருடமாக அவர்கள் காதலித்து வந்தனர். கரிஷ்மாவுக்கு சுதாகர் சித்தப்பா உறவு முறை ஆகும். முறை தவறிய இந்த காதலுக்கு
இருவரது பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் தோல்வியில் முடிந்து விடுமோப என சுதாகர் பயந்தார்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி கரிஷ்மாவை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். கடந்த 28-ந்தேதி கரிஷ்மாவை அழைத்துக் கொண்டு சுதாகர் ஊரை விட்டு சென்றார். இரு வீட்டு பெற்றோர்களும் தேடினார்கள். இந்த நிலையில் நேற்று கரிஷ்மாவின் அண்ணன் கந்தவேலை தொலைபேசியில் சுதாகர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கரிஷ்மா கர்ப்பமாக இருப்பதாகவும், தாங்கள் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
அதற்கு கந்தவேல் உடனடியாக இருவரும் ஊருக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்றார். அதன்படி காதல் ஜோடி ஊருக்கு திரும்பியது. அவர்களை செல்லத்துரை என்பவர் சமரசம் பேச அழைத்து சென்றார்.
தாணிக்கோட்டகம் செல்லும் வழியில் கந்த பகவான் ஆலமரத்தடியில் கந்தவேல் மற்றும் காதல் ஜோடியினர் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது கந்தவேல் நண்பர் சசிகுமாரும் உடன் இருந்தார். அவர்கள் சமாதானமாக பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கரிஷ்மாவின் அண்ணன் கந்தவேலுக்கும், சுதாகருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கந்தவேல் அவரது நண்பர் சசிகுமார் ஆகியோர் அருகில் இருந்த இரும்பு கம்பியால் சுதாகரை சரமாரியாக தாக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த கரிஷ்மா அவர்களை தடுக்க முயன்றார். அவரையும் ஆத்திரத்தில் தாக்கினார்கள்.
இதில் பலத்த காயமடைந்த சுதாகரும், கரிஷ்மாவும் பரிதாபமாக இறந்தனர். இதனைப் பார்த்ததும் கந்தவேல். சசிகுமார், செல்லத்துரை ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட கரிஷ்மா ஏற்கனவே திருமணம் ஆனவர். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஆறுமுக கட்டளையைச் சேர்ந்த வாலிபர் தமிழரசனை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார்.
கரிஷ்மாவின் நடவடிக்கை பிடிக்காததால் தமிழரசன் அவரை விட்டு விலகிவிட்டார். அதன் பின்னர்தான் சுதாகருடன் காதல் ஏற்பட்டது.
சுதாகர் தனது அக்காள் வீட்டிற்கு வந்து செல்லும்போது கரிஷ்மாவுடன் பழக்கம் உருவானது. காதல்ஜோடி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
0 கருத்து:
கருத்துரையிடுக