புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தெற்குத் தெரு கிராமம் சுப்பராமன் தெருவைச் சேர்ந்த கோடாங்கி அழகனின் மகன் கணபதி (வயது28). கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பாரதி (22). இவர்களுக்கு கங்கா தேவி (3 1/2), மாலதி(1 1/2) என்ற மகள்களும், பிருதிவிராஜ்(8 மாதம்) என்ற
மகனும் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 04.07.2012 அன்றும் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. குழந்தைகள் முன்னிலையில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்கு வாதம் செய்தனர். திடீரென்று அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

கணபதி தனது லுங்கியாலும், பாரதி தனது சேலையாலும் சமையலறை ஓட்டு கட்டையில் சுருக்கு போட்டு தொங்கினர். குழந்தைகள் பெற்றோரின் செய்கை என்ன வென்று தெரியாமல் சத்தம் போட்டனர். அவர்களின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top