கொல்கத்தாவில் மாணவியொருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திய ஆசிரியை கண்டித்து அம்மாணவியின் பெற்றோர் பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர்.மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள கோபால்நகர் கிரிபாலா பாலிகா வித்யாலயா பள்ளியில் இந்த கொடிய
சம்பவம் நடந்துள்ளது.
இங்கு 8 ம் வகுப்பு அறையில் இருந்த மாணவிகளிடம் பணம் திருடப்பட்டிருக்கிறது.
இந்த திருட்டில் ரூபாலி என்ற ஒரு மாணவி மேல் ஆசிரியை சந்தேகப்பட்டுள்ளார். உடனே இம்மாணவியை அழைத்து அனைவரது முன்பாக ஆடைகள் அனைத்தையும் களைய சொல்லியிருக்கிறார்.
அம்மாணவி எவ்வளவோ அழுதும் ஆசிரியையின் கோபம் குறையவில்லை. இதன்காரணமாக அம்மாணவி ஏங்கி அழுதபடி ஆடைகளை களைந்து வெக்கி தலை குனிந்து நின்றாள். இது மற்ற மாணவிகளுக்கும் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
வகுப்பறையில் நடந்த இச்சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோர்களிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதனையடுத்து அவரது தந்தை பொலிஸாரிடம் புகார் அளித்திருக்கிறார்.
இப்புகார் வந்திருப்பது உண்மைதான் இது குறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் அதிகாரி ஜெயந்தா முகர்ஜி கூறினார்.
ஏற்கனவே சிறுமியொருவரை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் இன்னும் ஓயாத நிலையில் தற்போது நடந்துள்ள இச்சம்பவம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக