புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

தாயால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட சிறுவன் பரிதாபமாக இறந்தான். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த வரகூர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சசிகுமார்(38). விவசாய கூலி தொழிலாளி. இவரது இரண்டாவது மனைவி கவிதா(30). இவர்களுக்கு சுனில்(6) என்ற
மகனும், ஒரு வயதில் சுனிதா என்ற மகளும் உள்ளனர். ஒரு வருடத்திற்கு முன் கணவரிடம் கோபித்துக்கொண்டு கவிதா தனது குழந்தைகளுடன் அதே தெருவில் உள்ள தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுனில் 1ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 10ம் தேதி பள்ளிக்கு செல்லும் வழியில், சுனிலுடன் தந்தை சிவக்குமார் பேசினார். இதுபற்றி அறிந்த கவிதா கணவன் மீது ஏற்பட்ட கோபத்தில் சுனில் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். உடம்பெல்லாம் தீ பற்றி எரிய, அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த சுனிலை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிந்து கவிதாவை கைது செய்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று சுனில் இறந்தான். இதையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top