புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஜவுளிக்கடையில் சேலை திருடியதால் மனைவி கைது செய்யப்பட்டார். அவமானத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்டார். கும்பகோணம் பட்டீஸ்வரம் திருசக்திமுற்றத்தை சேர்ந்தவர் ஆனந்தமுருகன்(37), இவரது மனைவி பரிமளா தேவி(32) கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு
வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையில் இருந்து 30 சேலைகள் கொண்ட பண்டலை பரிமளா தேவி திருடிச் சென்று விட்டார். ஜவுளிக்கடையில் சேலைகளை கணக்கு பார்த்தபோது 30 சேலை குறைவாக இருந்தது. இது குறித்து ஊழியரிடம் விசாரித்தனர். யாரும் எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர். பரிமளா தேவியிடம் சேலை வாங்கிய ஒரு பெண் அந்த புதிய சேலையை அணிந்து கொண்டு பரிமளாதேவி வேலை பார்க்கும் அதே கடைக்கு  ஜவுளி எடுக்க வந்தார். அப்போது அந்த சேலையை போல இன்னொரு சேலை எடுக்க நினைத்து விலை விசாரித்தபோது ஜவுளிக்கடை விலைக்கும், பரிமளாதேவி விற்ற விலைக்கும் பெரிய வித்தியாசம் இருந்தது.

எனவே கடைக்காரரிடம் அந்த பெண் இவ்வளவு அதிகமாக விலை சொல்கிறீர்களே, உங்களிடம் வேலை பார்க்கும் பரிமளா குறைந்த விலைக்கு சேலை கொடுக்கிறாரே என்று கூறி உள்ளார். அதன்பேரில் பரிமளாதேவியிடம்  ஜவுளிக்கடைக்காரர்கள் விசாரித்தபோது அவர் சேலை திருடியதை ஒப்புக்கொண்டார். புகாரின்பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிந்து பரிமளா தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனைவி திருட்டு வழக்கில் சிறை சென்றதால் அவமானமடைந்த ஆனந்தமுருகன் நேற்று இரவு வீட்டில் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top