கர்ப்பமான பெண்களுக்கு ரத்த சோகை இருந்தால் பிரசவத்தின் போதும் அதற்கு பிறகும் பல சிக்கல்கள் ஏற்படலாம். பிரசவத்தின் போது பொதுவாகவே அதிக ரத்த இழப்பு ஏற்படும். ஏற்கனவே ரத்தசோகை நோய் இருந்தால் ரத்த இழப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும். தாய்க்கு ரத்தசோகை இருந்தால் குழந்தை
குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. அந்த குழந்தைகளுக்கும் ரத்த சோகை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
சோர்வு:
ரத்த சோகை நோயாளிகளின் வாழ்க்கை முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரத்த சோகை தீவிரமாக இருந்தால் வேலை பார்ப்பதே அவர்களுக்கு மிகவும் கடினமான காரியமாக இருக்கும். தங்களுடைய தினசரி வேலை களையே அவர் களால் கவனிக்க முடியாமல் போகக் கூடும். இந்த நீண்ட கால சோர்வின் காரணமாக ஒருவர் தீவிர மன அழுத்த நோயாளியாகும் வாய்ப்பும் இருக்கிறது.
நோய்க்குள்ளாகும் வாய்ப்பு:
ஆரோக் கியமானவர்களைவிட ரத்த சோகையுடன் கூடியவர்கள் நோய்த் தொற்றுக் குள்ளா கும் வாய்ப்பு அதிகம்.ரத்த சோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்ஸிஜனின் அளவுகுறைவதால் அதிக ஆக்ஸிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை `பம்ப்’ செய்ய வேண்டியிருக்கும்.
இது தொடரும் பட்சத்தில் இருதயம் செயலிழக்கக்கூடும். ரத்த சோகையின் காரணமாக வைட்டமின் பி 12 குறைபாடு ஏற்படும். இதனால் நரம்புகள் சேதமடையும் வாய்ப்பு இருக்கிறது. நரம்புகளின் ஒழுங்கான செயல்பாட்டிற்கு வைட்டமின் பி 12 போதுமான அளவில் உடலில் இருப்பது அவசியம்.
0 கருத்து:
கருத்துரையிடுக