புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்.ஆனைக்கோட்டை, முள்ளிப் பகுதியில் கத்தி குத்துக்கு இலக்காகிய குடும்பப் பெண் ஒருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாகவே குறித்த பெண் மீது அவரது கணவன் கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தையடுத்து, கணவன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த பெண் பாடசாலை ஒன்றில் சமையல் வேலைக்கு செல்பவர் என்றும் இன்று காலை வழமைபொல் வேலைக்கு செல்ல தயாராகும் போதே இவ்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தலைமறைவாகியுள்ள கணவரைத் தேடிக் கைது செயற்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top