புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


விவசாயியின் கர்ப்பிணி மனைவியைக் கடத்தி 2வது கல்யாணம் செய்து கொண்டார் ஒரு கொடுமைக்கார ஆசாமி. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸில் புகார் கொடுத்துள்ளார் அந்த விவசாயி.


வேலூர் மாவட்டம் மேல்களத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவர் போலீஸில் கொடுத்துள்ள புகாரில்,

எனக்கும் எனது அக்காள் மகள் தேன்மொழிக்கும் கடந்த 23.08.2009-ல் திருமணம் நடந்தது. எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக கடந்த ஜனவரி மாதம் 4-ந்தேதி திருத்தணி மருத்துவமனைக்குப் போனார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில், எனது மனைவியை மெத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த நேசன் என்பவர் கடத்திக் கொண்டு போய் 2வது திருமணம் செய்து கொண்டு விட்டதாக தெரிய வந்தது.

இது சட்டப்படி குற்றமாகும். இதுகுறித்து நேசனை நான் அணுகியபோது கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என்று கோரியுள்ளார் ஆறுமுகம்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top