புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மும்பையில் 7 வயது சிறுமியை கடத்தி சென்று, பாலியல் ரீதியாக துன்புறுத்தி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மும்பை ஆக்ரா நெடுஞ்சாலையில் நாசிக் என்னுமிடத்தில் வீட்டிலிருந்த 7 வயது பெண் குழந்தை கடந்த 28ஆம் திகதி காணாமல் போனது.


இதனையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்தனர்.

விசாரணையில், குடும்ப நண்பரான யோகேஷ் ராமதாஸ் காடே என்பவர் அவர்களது வீட்டிற்கு வந்து, அந்த சிறுமியை அழைத்து சென்றது தெரியவந்தது.

பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில், அருகிலுள்ள மீனாட்டை தாக்கரே மைதானத்தில் அவளுடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனே அவரது உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், அந்தப் பெண் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி, ராமதாஸ் காடேவை கைது செய்தனர்.

இவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டு பலமுறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top