புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பிலிப்பைன்ஸ் நாட்டின் குயிசான் நகரில், ரெய்மர் பார்பரன் என்ற பெண் தனது 9 வயது மகன் மார்க் ஜேசன் பினீடாவுடன் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மனநிலை பாதித்த சிறுவன், மார்க் ஜேசனை
திடீரென பிடித்து இழுத்து, கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து (ஐஸ் கத்தி) கொலை செய்துவிடுவதாக மிரட்டினான்.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய், தனது குழந்தை கத்தி முனையில் உயிருக்குப் போராடுவதை அறிந்து சாமர்த்தியமாக செயல்பட்டார். அந்த மனநிலை பாதித்த சிறுவனிடம் நைசாக பேச்சு கொடுத்து என்ன வேண்டும் என்று கேட்டுப் பார்த்தார்.

ஆனால் அச்சிறுவனோ கத்தியை மார்க் ஜேசனின் கழுத்தில் வைத்து அழுத்தியபடி யாரும் நெருங்க விடாமல், பற்களை நறநறவெனக் கடித்து மிரட்டினான். அப்போதும் சாந்தமாக இருந்த தாய், சிலுவையைக் காட்டி, என் குழந்தையை விட்டுப் போ என கூறியுள்ளார். அதற்கும் அச்சிறுவன் அசையவில்லை. மாறாக குழந்தையின் கழுத்தை இன்னும் வேகமாக நெரித்தான்.

இதனால் பயந்துபோன அந்த தாய், இப்பிரச்சினையில் போலீசார் தலையிட அனுமதித்தார். இதையடுத்து போலீசார் அவனுடன் சாமர்த்தியமாக பேசி, குழந்தையை மீட்டனர். இருப்பினும் குழந்தையின் கழுத்தில் லேசான காயங்கள் இருந்தன. உடனடியாக அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.


இரவு 11 மணியளவில் பிடிபட்ட குழந்தை, மறுநாள் காலை 7.30 மணிக்குத்தான் மீட்கப்பட்டான். இத்தனைக்கும் மனநிலை பாதித்த அந்த சிறுவன், குடிப்பதற்கு தண்ணீர்தான் கேட்டுள்ளான். அவன் மனநிலை பாதிக்கப்பட்டவனாக இருந்தாலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனைக் கைது செய்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top