19 வயது நிரம்பிய இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்து, ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டது ஒரு வாலிப கும்பல். காவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 19 வயது நிரம்பிய இளம்பெண் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். விடுமுறையின் நிமித்தம்
யஷ்வந்த்புரத்திலிருந்து மைசூருக்கு, மைசூர் எக்ஸ்பிரசில் புறப்பட்டுச் சென்றுள்ளார். ரயிலில் ஜெனரல் கம்பார்ட்மன்ட்டில் பயணித்த காவ்யாவிடம் ஒரு இளைஞர் கும்பல் தகாத முறையில் நடந்துக் கொண்டனர். அதில் ஒருவன் காவ்யாவை கற்பழிக்க முயன்றுள்ளான். இந்நிலையில், அச்சமடைந்த காவ்யா மாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிப்பதாக அவர்களிடம் கூறியுள்ளார்.
எனவே, ஆத்திரமடைந்த வாலிபர்கள் ரயில் மாத்தூர் பாலத்தில் ஏறிய பின், ரயிலில் இருந்து காவ்யாவை வெளியே தள்ளி விட்டனர். தடுமாறிய காவ்யா பாலத்தின் மேலிருந்து அதாவது 25 அடி உயரத்திலிருந்து கீழே வறண்டு போன ஆற்றுப்படுகையில் விழுந்தார். பெண் கீழே விழுந்ததை கவனித்த பயணி ஒருவர் மாத்தூர் காவல் நிலையத்திற்கு போன் செய்துள்ளார். எனவே, காவ்யா காப்பாற்றப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, வாலிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக