உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது குழந்தையை அத்தை, மாமா ஆகியோர் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. வியாசர்பாடியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி அன்னை சத்தியா நகர் 5வது தெருவை சேர்ந்தவர்
தமீம் அன்சாரி (30). இவரது மனைவி மும்தாஜ் (26). தம்பதிக்கு மகன் முபாரக் அலி (6), மகள் ப்ரானா (4). நேற்று முன்தினம் தம்பதி வேலைக்கு போகும்போது மகள் ப்ரானாவை அருகில் வசிக்கும் தங்கை ஷகிலா வீட்டில் தமீம் அன்சாரி விட்டு சென்றார். மாலை குழந்தையை கூப்பிட சென்றபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இந்த நிலையில் ப்ரானாவை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்து சடலத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதற்கு சம்மதிக்காத ஷகிலா, குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அங்கு குழந்தையை கொண்டு சென்றபோது சுடுகாட்டில் இருந்த ஊழியர், குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் சந்தேகப்பட்டு இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் மழுப்பலான பதில் கூறியதால் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து ப்ரானாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்து, துன்புறுத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஷகிலா, அவரது கணவர் சலீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிவந்த தம்பதி, பின்னர் ப்ரானாவை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சம்பவத்தன்று ஷகிலா வீட்டில் குழந்தை ப்ரானா தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது சலீம், ஷகிலா ஆகியோர் உல்லாசமாக இருந்துள்ளனர். தூக்கத் தில் எழுந்த குழந்தை அழுது கொண்டே ஷகிலா அருகில் வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ஷகிலா, அருகில் கிடந்த பருப்பு கடையும் மத்தால் குழந்தை முகத்தில் அடித்துள்ளார். இதில் ப்ரானா உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. பிறகு குழந்தையின் மார்பில் சலீம் எட்டி உதைத்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த குழந்தை இறந்தது என்றனர். கைதான சலீம், ஷகிலா ஆகியோரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக