அமெரிக்காவில் மனைவியை சங்கிலியில் கட்டிப்போடு 10 ஆண்டுகளுக்கு மேல் சித்ரவதை செய்த கணவன். அமெரிக்காவின் வெஸ்ட் விர்ஜினியா பகுதியில் வசிப்பவர் பீட்டர் லிசான், இவருடைய மனைவி ஸ்டெபானி, வயது 43. பொருட்கள் வாங்க பீட்டர் கடைக்கு சென்ற போது,
அவரது வீட்டில் இருந்து பெண்ணில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின்படி, போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். வீட்டுக்குள் ஸ்டெபானியின் கால்கள் சிதைக்கப்பட்டும், பல இடங்களில் சூடு வைத்த காயங்களுடனும் இருந்தார். மேலும், சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் பீட்டரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பீட்டர் தனது மனைவியை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் சங்கிலியில் கட்டி போட்டு அடிமை போல் நடத்தி உள்ளார். மேலும், இரும்பு ராடால் ஸ்டெபானியின் உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளார். அத்துடன் கால்களை சிதைத்துள்ளார்.
இதைவிட கொடுமை, சங்கிலியில் கட்டப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கருவுற்று குழந்தையும் பெற்றிருக்கிறார். இவ்வளவு சித்ரவதைகளையும் அனுபவித்த ஸ்டெபானி, எப்படியோ வீட்டின் மறுபக்கத்துக்கு வந்து காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார்.
அதன்மூலம் தான் ஸ்டெபானியை பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். மனைவியை கொடுமைப்படுத்திய பீட்டர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு விசாரணை நாளை நடக்கிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக