திட்டக்குடியை அடுத்த வேப்பூர் அருகே பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன். இவரது மனைவி எழில்மதி (வயது 25). இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
ரங்கநாதன் கேரளாவில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து எழில்மதி தனது குழந்தையுடன் மாமனார் வீட்டிலேயே வசித்து வந்தார்.
இந்த நிலையில் எழில்மதி உடலில் பலத்த தீக்காயத்துடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் எழில்மதி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து எழில்மதி மரண வாக்குமூலம் அளித்தார்.
அதில் கூறி இருப்பதாவது:-
காதல் திருமணம் செய்து கொண்டதாலும் எனது கணவர் ரங்கநாதன் கேரளாவில் தங்கி வேலை செய்து வந்ததாலும் என்னிடம் எனது மாமனார் ராமசாமி, மாமியார் சகாயம் ஆகியோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி என்னை அடித்து கொடுமை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டின் தோட்டத்தில் எனது கை- கால்களை ராமசாமி பிடித்து கொள்ள மாமியார் சகாயம் எனது உடல் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்தார்.
இவ்வாறு எழில்மதி வாக்குமூலம் அளித்தார்.
இதன் அடிப்படையில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராமசாமியையும், சகாயத்தையும் கைது செய்தனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக