கொழும்பு – நாராஹென்பிட்டி பகுதியில் செயற்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை திட்டமிட்ட குற்றம் மற்றும் மோசடி தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுள்ளனர்.நேற்று 25ம் திகதி மாலை இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டதாக நாராஹென்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபச்சார விடுதியை செயற்படுத்திய இருவரும் அதில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டு வந்த தாய்லாந்து பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நாராஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 26ம் திகதி அவர்கள் புதுக்கடை இலக்கம் 03 நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக