புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ். அச்சுவேலி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனொருவன் தனது தாயை கேபிள் கம்பியால் தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞனை கைது செய்துள்ளதாகவும் அச்சுவேலி பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் மேலும்
தெரியவருவதாவது,

தர்மன் இந்திரா (வயது 47) என்ற தாயே மகனின் கேபிள் கம்பி தாக்குதலுக்கு இலக்காகிய படுகாயமடைந்தவராவார்.

காணியை விற்று தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தாயிடம் வற்புறுத்தி போது தாயர் மறுப்பு தெரிவித்தமைக்காகவே கேபிள் கம்பியினால் தாக்கிக் காயப்படுத்தி விட்டு தலைமறைவாகியுள்ளார்.

தாயார் தலையில் படுகாயங்களுக்கு இலக்கான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தாயைத் தாக்கிய 22 வயது மகன் கைது செய்யப்பட்டு, அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top