புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கோமாவிலேயே குழந்தை பெற்றுள்ளார். அவருக்கு 2 வாரங்கள் கழித்து சுயநினைவு வந்தபோது அவருக்கு தான் கர்ப்பமானதே நினைவில் இல்லை.


இங்கிலாந்தைச் சேர்ந்தவர் எம்மா மைனர்ஸ்(23). அவருக்கு நிமோனியா காய்ச்சல் வந்ததையடுத்து சுயநினைவை இழந்தார். மேலும் அவருக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் 2 வாரகாலம் கோமாவில் இருந்தார். கர்ப்பமாக இருந்த அவரின் சிசு 29 வாரங்களாக இருக்கும்போதே அவருக்கு பிரசவம் நடந்தது.

கோமாவில் இருந்தபடியே அவருக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகே அவருக்கு சுயநினைவு வந்தது. அவரிடம் குழந்தையைக் கொடுத்த மருத்துவமனை ஊழியர்கள் நடந்தவற்றை அவரிடம் விவரித்தனர்.

இது குறித்து எம்மா கூறுகையில்,

நான் கண்விழித்தவுடன் நர்சுகள் என்னை வாழ்த்தினார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே எனக்கு புரியவில்லை. எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறான் என்பது நினைவிருக்கிறது. ஆனால் நான் கர்ப்பமானது எனக்கு நினைவில்லை. எனக்கு பிரசவ வலியே தெரியவில்லை. ஆனால் எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இது ஒரு அதிசயம் என்றார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top