புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தந்தை திட்டியதால் ஆத்திரமடைந்த இளம் பெண் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாப்பின் ஃபைஸ்லாபாத் எனும் பகுதியில் உள்ள பிலால் நகரைச் சேர்ந்தவர் முகமது ஷபீர். இவரது மகள் பக்கத்து வீட்டில்
வசித்து வந்த முகமது பஷாரத் என்ற நபருடன் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

இதனால், அந்த இளைஞருடன் பேச வேண்டாம், அவரது நட்பு வேண்டாம் என தந்தை ஷபீர் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் தந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் பொலிசுக்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து பொலிசார் வீட்டிற்குள் நுழைந்து விசாரித்ததில், தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்தப் பெண்ணுக்கு துப்பாக்கியை வாங்கித் தந்தது முகமது பஷாரத் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இவர்களிருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top