ஜேர்மனியில் 17 வயதுடைய வாலிபர் ஒருவர் தீயிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் அவருடைய அறையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.குறித்த வாலிபர், தானக்கு யாரோ கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,
பாதுகாப்பு தேவையெனவும் பொசிசாரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
பொலிசார் விரைந்து வருவதற்குள் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால் பொலிசார் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட குறித்த நபருடைய காதலியின் தந்தையான 52 வயது மதிக்கத்தக்க நபர் தான் இந்தக் கொலையை செய்துள்ளார்.
இது பற்றி காதலியின் தந்தை தெரிவிக்கையில், 14 வயதுடைய எனது மகளுடன் குறித்த வாலிபன் பழகுவது பிடிக்கவில்லை. பலமுறை நான் கண்டித்தும் இது தொடர்ந்ததால் இந்தக் கொலையை செய்தேன் என தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக