புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணின் தலைமுடி மற்றும் புருவத்தை மழித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள லய்யா மாவட்டத்தை சேர்ந்தவர் சபீர் ஹுசைன்.
இவரது மனைவி பர்வீன் பிபி(வயது 25). பக்கத்து
வீட்டுக்காரருடன் பர்வீன், தகாத உறவு வைத்திருந்ததாக கூறி இவருடைய நாத்தனார் மற்றும் மைத்துனர்கள் அவருடன் சண்டை போட்டனர்.

தகராறு முற்றியதில் மைத்துனர் மற்றும் நாத்தனார் உள்ளிட்ட ஐந்து பேர் ஒன்று சேர்ந்து பர்வீனின் தலையை மொட்டையடித்தனர். அவரது புருவத்தையும் மழித்தனர்.

அவர் முகத்தில் கரியை பூசி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பொலிசார் பர்வீனின் நாத்தனாரையும், மற்றொருவரையும் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள மைத்துனர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top