புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கணவன் தன்னுடைய உயிரணுக்களை தானம் செய்ய, மனைவியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என இங்கிலாந்து பெண் ஒருவர் போர்க்கொடி உயர்த்தி உள்ளார்.இங்கிலாந்தில் வசிக்கும் பெண் ஒருவர் பிரபல பத்திரிக்கையான டெய்லி மெயிலுக்கு பேட்டியொன்றை
அளித்துள்ளார்.

அதில், என் கணவர் உயிரணுக்களை எனக்கே தெரியாமல் இரகசியமாக தானம் செய்துள்ளார். இது முற்றிலும் தவறு.

ஆண், பெண் இருவரும் திருமண பந்தத்துக்குள் வந்து விட்ட பிறகு, கணவனின் உயிரணுவும் திருமண சொத்தாகி விடுகிறது. எனவே மனைவியின் அனுமதி இல்லாமல் கணவன் உயிரணுக்களை தானம் செய்ய கூடாது.

இந்த விடயத்தில் மருத்துவமனைகள், கிளினிக்குகள் ஆண்களிடம் உயிரணுக்களை தானம் பெறும் போது, மனைவியின் அனுமதியையும் பெற வேண்டும்.

என் கணவர் தானம் கொடுத்த உயிரணுக்குள் மூலம் பிறக்கும் குழந்தைகள், என் குழந்தையிடம் பிற்காலத்தில் சகோதர உறவு கொண்டாட வரலாம்.

என்றாவது ஒரு நாள் அவர்கள் என் குடும்பத்துக்கு பிரச்னையாக மாறலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹியூமன் பெர்டிலைசேஷன் அண்ட் எம்பிராலஜி(Human Fertilisation and Embryology) ஆணையத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில் உயிரணுக்கள் தானம் அளிக்கும் போது மனைவியின் அனுமதி பெற வேண்டும் என்ற விதியை கொண்டுவர வேண்டும்.

என் கணவரின் உயிரணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையோ அல்லது சம்பந்தப்பட்ட பெண்ணோ நாளை அவரை தொடர்பு கொண்டால், அதை என்னால் எப்படி தடுக்க முடியும். எனவே சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top