விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மகேஷ்வரி (25). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு வேலை விஷயமாக வந்த திண்டிவனத்தை அடுத்த கிரண்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் ஏழுமலையுடன்
மகேஷ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
கடந்த 10 மாதத்திற்கு முன்பு மகேஷ்வரி காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பல இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே கள்ளக் காதல் ஜோடி பெரிய பாளையத்தில் தங்கி இருப்பது தெரிந்தது. உடனே செந்தில் அங்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.
ஏழுமலையிடமும் அவரது உறவினர்கள் மகேஷ்வரியை கணவருடன் அனுப்பி வைக்குமாறு வற்புறுத்தி வந்தனர். இதுபற்றி அறிந்ததும் காதலனை விட்டு பிரித்து விடுவார்கள் என்று மகேஷ்வரி பயந்தார். இதில் மனவேதனை அடைந்த அவர் டீசலை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்வரி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெரிய பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக