தன்னை பார்த்து சிரிக்காத இரண்டு வயது மகளை, மிதித்து கொன்ற தந்தை மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பகுதியை சேர்ந்தவர் கெபு இகமானு. இவரது இரண்டு வயது குழந்தை பிறந்தது முதல்,
பாட்டி வீட்டில் வளர்ந்தது.
கடந்த 2010ஆம் ஆண்டு தன்னுடைய மகளை வீட்டுக்கு அழைத்து வந்தார் கெபு இகமானு. பாட்டி வீட்டில் வளர்ந்ததால், அந்த குழந்தை தந்தையிடம் பழக தயங்கியது. இதனால் கடுப்பான இகமானு குழந்தையை சிரிக்கும் படி வற்புறுத்தினார்.
ஆனால் குழந்தை சிரிப்பதற்கு பதில் அழுதது. மேலும் கோபமடைந்த இகமானு அந்த குழந்தையை தூக்கி வீசினார்.
சுவருக்கு வெளியே போய் விழுந்த குழந்தையை மிதித்து காயப்படுத்தினார். கை எலும்பு முறிந்த நிலையில், தலையில் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது.
இது தொடர்பாக இகமானுவை கைது செய்த பொலிசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக