புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


மன்னார், வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கேதீஸ்வர ஆலயத்தின் புனருத்தாரண செயற்றிட்ட பணிகள் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


 இந்திய அரசு வழங்கும் ரூபா 360 மில்லியன் உதவியுடன் இவ் ஆலய புனருத்தாரண பணிகள் இடம்பெற இருக்கின்றன.
இந்தியாவின் கலாசார வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சர் குமாரி செல்லாவும், பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா ஆகியோர் முன்னிலையில் அபிஷேக பூஜை வழிபாடுகள் செய்யப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ம் திகதி இந்திய அரங்கத்தின் சார்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தாவும் ஆலய திருப்பணிச்சபைத் தலைவரும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி மாமல்லபுர கட்டக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரியிலிருந்து வருகின்ற விற்பன்னர்களால் இந்திய அரசாங்கம் செய்கின்ற ரூபா 360 மில்லியனுக்கு மேற்பட்ட நிதியுதவியுடன் முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகின்றன.

 முதற்கட்டமாக உள் மகா மண்டபம் சம்பந்தமான வேலைகள் கருங்கற்களால் செதுக்கப்பட்டுச் செய்யப்படும் இந்நிகழ்வுக்காக இந்திய கலாசார வீடமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு மத்திய அமைச்சர் வருவதையிட்டு இலங்கை வாழ் சைவப்பெரு மக்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

 இவ் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ள திருகேதீச்சரப் பெருமானின் அடியார்களையும் ஆலய திருப்பணி சபை அழைக்கின்றது.

 இந்த ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் திருக்கோபுரங்களை அமைக்க இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் திருப்பணிச்சபை கேட்டுக்கொள்கிறது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top